Friday, October 23, 2026
Latest:
உள்நாடு

காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்க்கு அமைய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல் வேறு செயற்திட்டங்களின் தொடரில்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (25.01.2025) காத்தான்குடி கடற்கரை சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் கே.எம்.இக்பால் தலைமையில் இடம்பெற்றதுடன் சிவில் சமூக சுற்றாடல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம்.ஜவாஹிர், பெருங் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரஹீம் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் , உப குழுக்களின் உறுப்பினர்கள் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எம்.பஹத் ஜுனைட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *