Friday, October 23, 2026
Latest:
உள்நாடு

உள்ளூராட்சி தேர்தல் பணிகளை முன் கூட்டியே ஆரம்பிக்கும் மொட்டு கட்சி.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

பிரசாரத்திற்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். 

ஆரம்ப நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புனித ஜெய ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசேயவுக்குச் சென்று ஆசி பெற திட்டமிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது அட்டமஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரையும் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்.

மத அனுஷ்டானங்களுக்குப் பிறகு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ச்சியான பொதுக் கூட்டங்களை நடத்தும், கிராமப்புறத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் இணைந்து அவர்களின் திட்டங்களை கோடிட்டுக் காட்டவும், தேர்தலுக்கான ஆதரவைப் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *