உள்நாடு

வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் பலி

கெக்கிராவ தம்புள்ளை பிரதான வீதியில் மிரிஸ்கோனியாவ பிரதேசத்தில் நேற்று (11) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் சார்ஜன்ட் பயணித்த கெப் பயணிகள் போக்குவரத்து பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (11) மாத்தளை மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி கெக்கிராவ பொலிஸ் நிலையம் திரும்பிச் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் கெப் வாகனத்தின் பாரதியும் அதில் பயணித்த சார்ஜன்டும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் போது சிகிச்சை பலனின்றி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் சார்ஜன்ட் பயணித்த கெப் வாகனத்தின் பாரதியும் ஆபத்தான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *