விளையாட்டு

இலங்கை எதிர் நியூஸிலாந்து வெள்ளைப்பந்துத் தொடருக்கான அட்டவணை வெளியீடு

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணையினை நேற்று முன்தினம் (11) இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்தது.

அதற்கேற்ப இலங்கை அணி நியூஸிலாந்து பயனித்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்கின்றது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்று முடிவுக்கு வந்திருந்தது.

அதற்கமைய மிகுதி இரு தொடர்களான ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை அணி நியூஸிலாந்து செல்கின்றது. அதற்கேற்ப முதலில் 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் மற்றும் 2ஆவது போட்டிகள் எதிர்வரும் 28ஆம், 30ஆம் திகதிகளில் டவுரங்காவிலுள்ள பே ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மேலும் 3ஆவதும் இறுதியுமான போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி நெல்சனில் உள்ள செக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வெலிங்டனில் உள்ள பெசின் ரிசேர்வ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மேலும் 2ஆவது போட்டி ஜனவரி 8ஆம் திகதி ஹெமில்டனில் உள்ள செடோன் பார்க் மைதானத்திலும் , 3ஆவதும் இறுதியுமான போட்டி ஜனவரி 11ஆம் திகதி ஓக்லண்டில் உள்ள ஈடன் பார்க் மைதானத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *