விளையாட்டு

மியன்மாருடன் இலங்கை இன்று பலப்பரீட்சை

FIFA சர்வதேச நட்புறவுப் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை மற்றும் மியன்மார் உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளில் இன்று (10) முதல் போட்டி இலங்கை நேரப்படி 3 மணிக்கு மியான்மாரின் யாங்கூனில் உள்ள சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் கூற்றுப்படி, சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நட்புற தொடர்களில் இலங்கை அணி இன்று (10) முதல் போட்டியிலும் எதிர்வரும் 13ஆம் திகதி இரண்டாவது போட்டியிலும் பங்கேற்கின்றது. இத் தொடர் இலங்கை அணிக்கு மிகப் பெரிய உந்துசக்தியைக் கொடுக்கும்.

இத் தொடருக்காக சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி கடந்த 3 நாட்களுக்கு முன்னறே மியன்மார் சென்று அங்கு தொடராக பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் இலங்கை அணி இறுதியான செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி புனொம் பென் ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டு இடம்பெறப்போகும் ஆசியக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் கால்பந்து தகுதிச் சுற்றில் கம்போடிய அணியை 4:2 என்ற பெணால்ட்டி கோல்களின் அடிப்படையில் வெற்றியீட்டி அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *