கல்கந்தேவ பகுதியில் மின் தாக்கி ஒருவர் பலி
ஹொரவப்பொத்தானை கல்கந்தேவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஹொரவப்பொத்தானை கல்கந்தேவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காட்டு மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் காணியில் சட்டவிரோதமாக மின் கம்பிகளை பொருந்தியதாக கூறப்படும் 40 வயதுடைய நபர் ஒருவரை சந்தித்தேன் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
