பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் தேர்தல் அலுவலகங்களிலும் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தேதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் வாக்களிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
