பரிதி வட்டம் எறிதல் போட்டியில் மாகாண ரீதியில் சாதனையை முறியடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சாதனை..!
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் திங்கட்கிழமை(09) நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் எம்.எப்.அதீப் அஹமட் U – 20 பரிதி வட்டம் எறிதல் பிரிவில் மாகாண மட்டத்தில் முதலாமிட அடைவாக காணப்பட்ட 35.52 மீட்டர் தூரத்தை முறியடித்து 36.41 மீட்டர் தூரம் பரிதி வட்டத்தை எறிந்து மாகாண ரீதியில் முதலிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம் மாணவனை வாழ்த்தி வரவேற்க்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன்
பாடசாலையின் ’88 O/L ’91 A/L பழைய மாணவர்களின் பங்களிப்பு விளையாட்டு துறையை மேம்படுத்துவதில் காத்திரமானதாகும்.
(எம்.பஹத் ஜுனைட்)

