சஜித் பக்கம் தாவுகிறார் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவர்..!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கவென, மலையகத்தில் இயங்கும் பிரதான அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் முன் வரவுள்ளதாக, நம்பகமான வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அந்த பலம் வாய்ந்த அரசியல் வாதி, தற்போதைய அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சுப் பதவி வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மலையகத்தின் பலமான தொழிற்சங்கத் தலைவராகவும் விளங்கும் இந்த அமைச்சரின் தலைமுறை, மலையக அரசியலில் உயர் பதவிகளை வகித்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் பலமான அரசியல்வாதி, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவது, எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
