இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதி; இங்கிலாந்தில் தமிழர்கள் போராட்டம்
இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியுள்ளதால் அந் நாட்டு கிரிக்கெட்டுக்கு தடை விதிக்குமாறு கோரி தமிழ் குழுவொன்று நேற்று லண்டன் ஓவல் அரங்குக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்தியது.
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது தினமான நேற்று போட்டி ஆரம்பமாவதற்கு முன் இந்த போராட்டம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
