சீனன்கோட்டையில் குழந்தை இன்மைக்கான இலவச மருத்துவ முகாம்..!
பேருவளை சீனன் கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையில் எதிர்வரும் 17ஆம் திகதி (17-8-2024) சனிக்கிழமையும் 18ஆம் திகதி (18-8-2018) ஞாயிற்றுக்கிழமையும் குழந்தை இன்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெறவுள்ளது.
சீனன்கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தலைசிறந்த வைத்தியர்களான டாக்டர் ஜே.கவ்யா (Dr.J.Kavya) மற்றும் டாக்டர் ஓ.எம்.பிரகாஷ் (Dr.O.M.Prakash) ஆகியோர் இந்த இலவச வைத்திய முகாமில் பங்கு பற்றி வைத்திய ஆலோசனை வழங்கவுள்ளதாக குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிம் தெரிவித்தார்.
மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.30 வரை இந்த இலவச மருத்துவ முகாம் இடம்பெறும்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது (குழந்தை இல்லாதவர்கள்) ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
முன்பதிவுக்கு 0764252797, 0773462366, 0740513008, 0776841594, 0761262679 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஏற்பட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)
