இம்முறை 101 மாணவர்கள் 3A சித்தி பெற்று மொத்தமாக 238+ முஸ்லீம் மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவு..!
இம்முறை (2023/2024) வெளிவந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு பூராவும் 238 இற்கும் அதிகமான முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த intake இன் 11.7% ஆகும்.
இவற்றுள் 137 பெண்கள், 101 ஆண்கள்.
மேலும் 101 மாணவர்கள் 3A சித்தி பெற்றுள்ளனர். சென்ற முறை இது 60 ஆகும்.
சிறந்த தீவுமட்ட நிலையாக ( Island rank) 04 இனை Kaluthara மாவட்ட Zam Rifae Hajiar Maha vidyalaya மாணவி Kamzul Faizer Fathima Nihla பெற்றுள்ளார்.
இவரது Z Score 2.9986 ஆகும்.
மேலும் Colombo மாவட்டத்தின் 1st Rank இனை Mohamed Shameem Mohamed Shafi எனும் மாணவர் பெற்றுள்ளார். இவரது Island Rank 06 ஆகும்.
இவர் Colombo Royal college மாணவர்.
இலங்கையின் சிறந்த மருத்துவ பீடத்தை கொண்ட கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு 25 மாணவர்கள் தெரிவாகின்றனர்.
சென்ற முறை இது 05 ஆகும்.
தீவளாவிய திறமை அடிப்படையில் முதல் 100 Rank இற்குள் 08 மாணவர்கள் காணப்படுகின்றனர்.
இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.
இலங்கை முஸ்லீம்களின் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்து முன்னேற்ற பாதைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
By Eng B.H.Hasan
( Facebook / Hasan Badurdeen )
நன்றி Faslin Majeed
