விளையாட்டு

மிணுவாங்கொடை வலயமட்ட உதைப்பந்தாட்ப் போட்டி. நூலிழையில் தோற்ற அல் அமான் மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவு.

மிணுவாங்கொடை வலயமட்ட 16 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் மீரிகம டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணியுடன் பெனால்ட்டி கோல்களும் சமநிலை பெற நாணயச்சுழற்சியில் தோல்வியடைந்த மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி 2ஆம் இடத்தினைப் பெற்றதுடன் மாகாண மட்டப் போட்டிக்கும் தெரிவாகி அசத்தியது.

நடப்பு ஆண்டுக்காண மிணுவாங்கொடை வலய மட்ட போட்டிகள் தற்சமயம் ஆரம்பித்து இடம்பெற்றுவருகின்றன. அதற்கமைய நேற்று, இன்று (05,06) ஆகிய இரு நாட்களாக இடம்பெற்ற 18 பாடசாலை அணிகள் பங்கேற்றிருந்த 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைப்தாட்ட போட்டித் தொடரில் முதல் மற்றும் 2ஆம் சுற்று போட்டிகளில் இலகு வெற்றி பெற்ற மிணுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. அதற்கமைய அரையிறுதிப் போட்டியில் பலமிக்க பொரலுபிட்டிய பாடசாலை அணிக்கு எதிரான போட்டியில் 1:0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இதற்கமைய இன்றைய தினம் (6) ஹுனுமுல்ல சீ.டபில்யூ. டபில்யூ. கன்னங்கரா மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பலமிக்க மீரிகம எ.எஸ். சேனநாயக்க கல்லூரி அணியை எதிர்த்தாடியது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்டினர. இருப்பினும் இரு அணிகளாலும் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியாமல் போக முதல்பாதி கோலின்றி சமநிலை பெற்றது.

பின்னர் இடம்பெற்ற தீர்மானமிக்க 2ஆம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியைக் கைவிட்டு கோலைக் காக்கும் முயற்சியில் தீவிரம் காட்ட இரு அணியின் முன்கள வீரர்களாலும் எதிரணி கோல் கம்பங்களை நெருங்க முடியாமல் போனது. இதனால் முழு நேர ஆட்டம் சமநிலை பெற்றது. இதன் விளைவாக வெற்றியாளரை தீர்மாணிக்க பெனால்டி உதை வழங்கப்பட முதல் 5 பெனால்டி உதைகளும் 5:5 என சமநிலை பெற்றது.

பின்னர் தொடர்ந்த பெனால்ட்டி உதையும் சமநிலையில் நிறைவடைய வெற்றியாளரை தீர்மானிக்க நாணயச்சுழற்சி செய்யப்பட அதில் மீரிகம டி.எஸ் . சேனநாயக்க கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியனானதுடன் அதிஷ்டமின்மையால் தோற்ற மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய அணி 2ஆம் இடத்தினைப் பெற்றதுடன் மாகாண மட்டப் போட்டிக்கான தனது வரவை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்,   உபைதுல்லாஹ்- மினுவாங்கொடை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *