மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவசரமாக தாஹிர் வெளியேற வேண்டும்..! -தூய தேசத்திற்கான ஊடகப்பிரிவு
அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தூய தேசத்திற்கான இயக்கம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியோடு இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை ஒரு சில சமூக ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்போடு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
தூய தேசத்திற்கான இயக்கம் 2018ம் ஆண்டிலிருந்து மிகத் தெளிவான கொள்கையோடு, எந்தவித கட்சிகளின் அங்கீகாரமும் இல்லாமல், மக்களின் தேவைகளை முன்னிறுத்தி தனித்துவமாக பயணித்து வருகிறது. தூய தேசத்திற்கான இயக்கத்தின் வளர்ச்சி அண்மைக்காலமாக அதிகரித்து இருப்பதும் மக்கள் மத்தியில் அதற்கு இருக்கின்ற அங்கீகாரத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து இருக்கின்ற போது, NTM தாஹிர் அவர்களை தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தகம் நகர சமூக ஊடக பக்கம் ஒரு செய்தியை பதிவு செய்திருக்கிறது.
இதுவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தியை தொடர்ந்து தூய தேசத்திற்கான இயக்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் அவர்களுக்கு அவசரமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறது. கட்சி மாறாத அரசியல்வாதி என்ற பெயர் பெற்ற, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நமக்கான உரிப்பு உரிமையை பெறுவதற்கு முன் நின்று உழைத்த, படமேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் அவர்கள் அவசரமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், தனக்கு இருக்கின்ற தனித்துவத்தை இப்படி செய்வதன் மூலம் பாதுகாக்கும் படியும் அவசரமாக வேண்டி இருக்கிறது.
புத்தளம் தேர்தல் தொகுதிக்குள் சிறுபான்மை மக்களை பிரித்து, தேசிய அரசியலுக்குள் தங்களுடைய கட்சியின் செல்வாக்கினை அதிகரித்துக் கொள்வதற்காக செயல்படும் சிறுபான்மை கட்சிகள் புத்தளம் தேர்தல் தொகுதி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது.
புத்தளம் தேர்தல் தொகுதியின் சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மயிலினதும் மரத்தினதும் வளர்ச்சிக்காக அடமானம் வைக்கும் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தாஹிர் அவர்கள் துணை போகக் கூடாது என்பதையும் வலியுறுத்தி இருக்கிறது.
கடந்த முறை போன்று இந்த முறையும் பொது கூட்டமைப்பன்றில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கி, தனக்கு இருக்கின்ற அரசியல் தனித்துவத்தை தாஹிர் அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த வேண்டுகோளின் பிரதான நோக்கமாக இருக்கிறது. இந்த வேண்டுகோளினை தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் Isham Marikar அவர்கள் WhatsApp மூலமாக NTM தாஹிர் இன்று காலை தெரிவித்திருக்கிறார்.
(தூய தேசத்திற்கான ஊடகப்பிரிவு)
