Friday, September 25, 2026
Latest:
உள்நாடு

ஈரான் ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

ஹெலி விபத்தில் காலமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட ஏனையோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் புல்லர்ஸ் வீதியிலுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஈரான் தூதுவரிடம் தமது அனுதாபத்தினை தெரிவித்ததுடன் அனுதாபப் பதிவேட்டில் தமது அனுதாபத்தினை பதிவு செய்தார். ஈரான் தூதுவரிடம் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச நெடுங்காலமாக நிலவி வரும் ஈரான் இலங்கை உறவு பற்றி பிரஸ்தாபித்ததுடன் உமா ஓயா திட்டம் மற்றும் பல்வேறு அபிவிருத்தி களுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பு உதவிகளையும் நினைவு கூர்ந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *