உள்நாடு

“பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற ஊடக செயலமர்வு..!

காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் “பகிர்வதற்கு முன் சிந்தியுங்கள்” எனும் தொனிப்பொருளிலான ஊடக செயலமர்வு சனிக்கிழமை (04) காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சமேளனத்தின் செய்ஹுல் பலாஹ் கல்வி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.எச்.எம்.அன்வர் தலைமையில் இடம்பெற்ற ஊடக செயலமர்வில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைறூஸ் வளவாளராக கலந்துகொண்டு சமூக வலைதள பாவனை மற்றும் போலி செய்திகளை இனங்காணல்,பாதுகாப்பு, சமூகவலைத்தள பாவனையின் போது முகம் கொடுக்கும் பிரச்சினைகள் என பல்வேறு தலைப்புக்களில் விரிவுரையாற்றினார்.

இவ் ஊடக செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்,இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் அதிதிகளால் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(எம்.பஹத் ஜுனைட்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *