Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் , கண்டி மாவட்ட செயலகம் இணைந்து நடத்திய இப்தார் விசேட நிகழ்வு..!

முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கண்டி மாவட்ட செயலகம் இணைந்து நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் விசேட நிகழ்வு கண்டி மீராமக்காம் பள்ளிவாசலில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னக்கோன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட். ஏ. எம்.பைசல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் லாபீர் ஹாஜியார், மாவட்ட மேலதிகச் செயலாளர், முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம். எம். எம். முப்தி, மற்றும் ஹாரிஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் கண்டி மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் சியாட், கண்டி மீராமக்காம் பள்ளிவாசல் தலைவர் இலாஹி ஆப்தீன், கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர். ஏ. சித்தீக், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எச். சலீம்டீன். மற்றும் சிங்கள, கிறிஸ்தவ இஸ்லாமிய சமயப் பெரியார்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *