விழித்தெழு சர்வதேச விருது பெறும் SRI LANKA PEN CLUB கவிதாயினிகள்
கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் விழித்தெழு பெண்ணே சர்வதேச அமைப்பின் தமிழ்ப்பெண் ஆளுமைகளின் சர்வதேச விருதுவிழா 2024 எதிர் வரும் 08.04.2024 தினம் கண்டி Golden Crown Hotel ல் நடைபெறவுள்ளது.இம்முறை Srilanka Pen Club இன் அங்கத்தவர்கள் நால்வருக்கு கிடைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
SLPC ஸ்தாகத் தலைவி இலக்கிய வித்தகர் சம்மாந்துறை மஷூறா உப தலைவி திருகோணமலை மர்ளியா சக்காப் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளர் கண்டி கலாபூஷணம் அறபா மன்சூர் சிரேஷ்ட உறுப்பினர் கலாபூஷணம் இஸ்மாலிஹா ராஜா ஆகியோரே தெரிவாகியுள்ளனர். மர்ளியா சக்காப் கல்வித் துறைக்காகவும், ஏனைய மூவரும் இலக்கியத்துறைக்காவும் விருதுபெறவுள்ளமை குறிப்பத் தக்கது.
