Friday, October 23, 2026
Latest:
உள்நாடு

வானிலையில் மாற்றம்

நாட்டின் தென் அரைப்பாகத்தில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று (20) தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *