உள்நாடு

கல்பிட்டி ஊர் டி வி யின் அல் குர்ஆன் கிராஅத் போட்டி..!

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவரும் முகநூல் தொலைக்காட்சியான ஊர் டிவி அல் குர்ஆன் கிராத் போட்டி நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.

அல் குர்ஆன் கிராத் நிகழ்ச்சியில் 12 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் பங்கேற்க முடியும் என்பதுடன், கிராத் ஆனது 1 தொடக்கம் 1.30 நிமிடங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காணொளி எந்த வித எடிட் செய்யப்படாததாக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் எப் பாகத்திலிருந்தும் இந் நிகழ்ச்சிக்கு பங்கேற்க முடியும் எனவும், இந் நிகழ்ச்சிக்கான இறுதித் திகதி 22.03.2024 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உங்கள் காணொளியை 0779689599 என்ற வட்சப் இலக்கத்திற்கு அனுப்புவதுடன் பெயர், வயது, முகவரி என்பவற்றையும் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

 

(அரபாத் பஹர்தீன்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *