Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

Thihariya United அணியை வீழ்த்தி Kahatowita FC இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்..!

சற்று முன் கம்பஹ ஸ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்று முடிந்த knockout கால்பந்து சுற்றுப்போட்டியின் முதல் சுற்றில் Kahatowita FC அணி Thihariya united அணியை எதிர்த்து களமிறங்கியது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு GAMPAHA வலயத்தில் நடைபெறும் இந்த சுற்றுப்போட்டி மிகவும் எதிர்பார்ப்பு மிக்கதாக அமைந்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதி நேரம் வரை எந்த அணியும் கோல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதை அடுத்து பெனால்டி சூட் மூலம் வெற்றியை தீர்மானிக்க வேண்டிய ஏற்பட்டது.

இதில் Kahatowita FC அணி 3-2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *