சீனன்கோட்டை அல் ஜாமியத்துல் பாஸியத்துஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் இடம்பெற்ற “புனித ரமலானை வரவேற்போம்” விசேட நிகழ்ச்சி..
பேருவளை சீனன்கோட்டை அல் ஜாமியத்துல் பாஸியத்துஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் “புனித ரமலானை வரவேற்போம்” எனும் தொனிப் பொருளில் விசேட நிகழ்ச்சிகள் மாணவர்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.
கலாபீட பணிப்பாளர் மௌலவி எம்.ஜே.எம்.பஸ்லான் (அஷ்ரபி-பீ.ஏ) யின் வழிகாட்டலின் கீழ் கலாபீட பாஸிய்யா மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அதிபர் மௌலவி எம்.அஸ்மிகான் (முஅய்யதி) தலைமை வகித்தார்.
புனித ரமலானை நல்ல அமல்களைக் கொண்டும் தான தர்மங்களைச் செய்தும் அலங்கரிப்போம் என்ற மகுடத்தில் அதிபர் விசேட உரையாற்றினார்.
மாணவர்களது பல்வேறு நிகழ்ச்சிகளும் இதன் போது இடம் பெற்றது.
விரிவுரையாளர்கள்,கலாபீட உறுப்பினர்கள் நிகழ்வில் பங்குபற்றனர்.
(படங்கள் – பேருவளை பீ எம் முக்தார்)