புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலய மாணவி முஹம்மத் அஷ்பாக் அப்ஷின் ஐரா தேசிய மட்டத்தில் முதலாம் இடம்
புத்தளம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலய மாணவி முஹம்மத் அஷ்பாக் அப்ஷின் ஐரா
2026ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில், முன்னேற்பாடின்றி பேசுதல் பேச்சுப்போட்டியில்
தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இந்த பெருமைமிக்க வெற்றியை பெற்றுத்தந்தமைக்காக இந்த மாணவிக்கு பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை முகாமைத்துவ குழுவினர், அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவிகள் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் சார்பாக தனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் அதிபர் சரீனா பர்வீன் தெரிவித்துள்ளார்.


(எம்.யூ.எம்.சனூன்)
