Thursday, November 26, 2026
Latest:
உள்நாடு

கம்பஹா மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை,இரண்டாம் கட்டமும் வெற்றிகரமாக நிறைவு; குவைத் அல்-நஜாத் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திட்டம் முன்னெடுப்பு

கம்பஹா மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கண்புரை நோயாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இலவச கண்புரை அகற்றுதல் மற்றும் கண் வில்லை பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க, ISRC Sri Lanka சமூக சேவை நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும், குவைத் நாட்டின் நிதி அனுசரணையிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், மேலும் 100 நோயாளர்களுக்கான கண் அறுவை சிகிச்சை நேற்று 24/11/2026 கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே முதலாம் கட்டத்தின் கீழ் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் 100 நோயாளர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டத்திலும் 100 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 200 நோயாளர்கள் இத்திட்டத்தின் ஊடாகப் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுவதற்காக பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் நேற்று முன்தினம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் நலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

(சனா அன்ஜூம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *