உள்நாடு

செம்மஞ்சள் நிற ஆடையுடன் பாராளுமன்றம் வந்த உறுப்பினர்கள்

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (25.11.2026) பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தையொட்டி செம்மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு – தமது ஒற்றுமையை வெளிக்காட்டும் முகமாக குறித்த செம்மஞ்சள் நிற ஆடையை அணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மஞ்சள் நிறமானது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளற்ற ஒளிமயமான எதிர்காலத்தைக் குறிப்பதோடு பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படுகிறது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் குறித்தும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 25-ஆம் திகதி ‘பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *