உள்நாடு

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர்கள் அனுமதி – 2027

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கு 2027ம் புதிய கல்வி ஆண்டு ஷரீஆ பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் 2026/12/12ம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு காஸிமிய்யா வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2027ம் ஆண்டு பாடசாலை கல்வியில் 8ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் தேகாரோக்கியம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மௌலவி அல்ஆலிம், க.பொ.த சாதாரண தர, உயர் தர கல்விகளையும், கணணி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதியான திறமைச் சான்றிதழ்களைப் இன்ஷா அல்லாஹ் பெறுவர்.

விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 07/12/2026ம் திகதிக்கு முன்னர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Formஐ நிரப்பவும் அல்லது தமது பெயர், முகவரி, பிறந்த திகதி, பாடசாலையில் இறுதியாக சித்தி அடைந்த தரம், தேக ஆரோக்கியம் ஆகிய விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை கீழ் கானும் முகவரி / மின்னஞ்சல் / WhatsApp அல்லது நேரில் சமர்பிக்கவும்.
https://forms.gle/EgBfaLiFuFU5gVoX8

மேலதிக் விபரங்களுக்கு 0756010034, 0788969384, 0774377788 எனும் இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளவும்.

அதிபர்
காஸிமிய்யா அரபுக் கல்லூரி
புத்தளம்.

https://www.facebook.com/share/1X7T7G4sT8/?mibextid=wwXIfr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *