கொழும்பில் சவுதி அரேபியாவின் 4வது கல்வி கருத்தரங்கம்
மிதவாதம், சமநிலை, சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய அணுகுமுறை
2026 நவம்பர் 18 அன்று கொழும்பு- 7, டன்கன் வொயிட் அரங்கில் நடைபெற்றது.
கொழும்பில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் அரச தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ், சவுதி அரேபியா இராச்சியத்தின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டுதல் அமைச்சகம், முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடத்தியது.
இந்த விரிவுரைகளில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆன் பள்ளி மாணவர்கள், உலமாக்கள், மௌலவிகள் பங்கேற்றனர்.
வரவேற்புரை முஸ்லிம், சமய மற்றும் கலாசார விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், பிரதம விருந்தினர் உரை சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் அஷ்ஷேக் முனீர் முலாஃபர், சிறப்பு விருந்தினர் உரை இலங்கையில் உள்ள சவுதி அரேபியாவின் பதில் தூதுவர் மேதகு யாசிர் அப்துர் ரஹ்மான் அல் ஹஸ்மி
அறிவியல் அமர்வின் அறிமுகவுரை: டாக்டர் எம்.ஆர்.எம். அம்ஜத் ரசிக், சிறப்புரை: அஸ்-ஷேக் நவ்வாஃப் அஹமது சவுதி அரேபியாவிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கான சவுதி அரேபியா இஸ்லாமிய விவகாரங்கள் தவ்வா வருகை தந்தார். அத்துடன் சவுதி அரேபிய அறிஞர் விரிவுரையும் நிகழ்த்தினார்.
மற்றும் வருகை தந்த சிறப்பு ஐந்து உறுப்பினர்கள் இலக்கங்கள் குழுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.














(அஷ்ரஃப். ஏ. சமத்)
