கஹட்டோவிட்ட மகளிர் சங்கத்திற்கு 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு
பெண்களின் சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கஹட்டோவிட்ட மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் 11 பெண் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (15.11.2026) கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலஃப்பர் கலந்து சிறப்பித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் கஹட்டோவிட்ட வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் இன்சாபின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கஹட்டோவிட்ட பிரஜா சக்தி அமைப்பிற்கு வழங்கப்பட்ட மொத்தம் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 தையல் இயந்திரங்கள் கஹட்டோவிட்ட மகளிர் சங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 10 தேவையுடைய பெண்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய தையல் இயந்திரங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் கஹட்டோவிட்ட வட்டார அமைப்பாளர் சகோதரர் ஹிஷாம் ஹாஜியார், கஹட்டோவிட்ட பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் சகோதரர் ஜவாத், கஹட்டோவிட்ட 369-A பிரஜா சக்தி அமைப்பின் தலைவர் சகோதரர் ஃபயாஸ், கஹட்டோவிட்ட மற்றும் ஓகொடபொல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கஹட்டோவிட்ட 369 மற்றும் 369-A பிரிவுகளின் கிராம சேவக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி, கஹட்டோவிட்ட மகளிர் சங்கத்தின் தலைவி மற்றும் செயலாளர், கஹட்டோவிட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சகோதரர் யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பெண்கள் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி, பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைவதற்கும், குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இத்திட்டம் ஒரு பயனுள்ள முயற்சியாக அமைந்தது.





