உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்​வுப் பகுதி நேற்று காலை காற்​றழுத்த தாழ்வு மண்​டலமாக வலு​வடைந்​தது. இது தென்​கிழக்கு, தென்​மேற்கு வங்கக்​கடலில் நிலைகொண்​டுள்​ளது. இது மேலும் வடக்கு, வடமேற்​காக நகர்ந்து இன்று (நவ.16) புய​லாக வலு​வடைய​வுள்​ளது. 

இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்​துரைத்த ‘அக்​வான்’ என்று பெயரிடப்​பட உள்​ளது. நாளை இது மேலும் வலுப்​பெற்று மத்​திய மேற்கு வங்​கக்​கடலில் புய​லாக நில​வக்​கூடும். இது அடுத்த 2 நாட்​களில் மேலும் வலுப்​பெற்று ஆந்​திரக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக்​கூடும்.

இந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலத்​தில் தொடங்கி மாலத்​தீவு வரை ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. கேரளக் கடலோரப் பகுதி​களுக்கு அப்​பால் தென்​கிழக்கு அரபிக்​கடல் பகுதி​களின் மேல் ஒரு வளிமண்​டல சுழற்​சி​யும் நில​வு​கிறது. இதன் காரண​மாக, வட கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகுதி​களில் இன்று மித​மான மழை பெய்​யக்​கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *