உள்நாடு

இளைய நிலா பஸ்மினா அன்ஸாரின் “யாதுமாகில்” கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29இல்

ஆசிரியையும், கவிதாயினியுமான “இளைய நிலா” பஸ்மினா அன்சார் எழுதிய “யாதுமாகில்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உக்குவளை அஜ்மீர் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

உக்குவளை ஸ்ரீ லங்கா இஸ்லாமிய எழுத்தாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ்விழா பற்றிய இவ்வமைப்பின் கலைத்துறை அங்கத்தவர்களது கலந்துரையாடல் அண்மையில் அஜ்மீர் பாடசாலை மண்டபத்தில் அதன் தலைவரும், கவிஞரும், கல்விப் பணிப்பாளருமான வரக்காமுரயூர் ராசிக் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *