உள்நாடு

பலாங்கொட கஸ்ஸப உட்பட மூன்று தேரர்கள் கைது

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் குறித்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பிக்குகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த இடத்திலிருந்த கூடாரம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *