உள்நாடு

மாளிகாவத்தைக்கு பெருமை சேர்த்த இளம் ஊடகவியலாளர் உமைர் நௌசாத்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) ஏற்பாட்டில் நடைபெறும் இலங்கை – பங்களாதேஷ் இளைஞர் பரிமாற்றத் திட்டம் – 2026 இல் பங்கேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட நகர்ப்புற இளைஞர்களையும், கெத்தாராமை சிலித்தரின் இளைஞர் கழகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி, டாக்கா நோக்கி பயணமாகிறார்.

10 நாட்கள் நடைபெறும் இத்திட்டத்தில், பல நாடுகளின் இளம் தலைவர்களுடன் கலந்துரையாடி, சர்வதேச இளைஞர் உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவுள்ளது.

மாளிகாவத்தை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினராகவும், Supreme Chamber of Youth Governance (SCY-GOV) தலைவராகவும் செயற்படும் இவர், ஊடகம், சமூக சேவை மற்றும் இளைஞர் தலைமைத்துவத்தில் தொடர்ந்து சிறந்து விளங்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *