உள்நாடு

மாத்தளை மேக்ஸ் பவுண்டேசன் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்ச்சி

மாத்தளை (Mercs foundation) மேக்ஸ் பவுன்டேஷன் ஏற்பாட்டில் கல்வியிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகளை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தொணிப் பொருளில் பெற்றோர்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன் தினம் (9) மாத்தளை ஆமினா மகளிர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக கலந்து கொண்ட அப்ரார் அறக்கட்டையின் தலைவரும், குழந்தை நல மற்றும் தீவிர சிகிச்சை நிபுணருமான பிரபல வைத்தியர் ரயிஸ் முஸ்தபா சொற்பொழிவு ஆற்றுவதையும், மேக்ஸ் அமைப்பின் தலைவர் எம்.எம்.ஹனிபா வைத்தியர் ரயிஸ் முஸ்தபாக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்குவதையும், இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களையும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட வைத்தியசாலை மகப்பேற்று வைத்தியர் சாபியையும் படத்தில் காணலாம்.

(மாத்தளை எம்.சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *