நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம்
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கு அதிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
