உள்நாடு

சம்மாந்துறையில் மாட்டிறைச்சி விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை அவசியம்; உறுப்பினர் பஹ்மி சுலைமான்

சம்மாந்துறைப் பிரதேசத்தில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சியின் விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் பஹ்மி சுலைமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு கடந்த 10ஆம் திகதி பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலன்களைக் கருத்திற்கொண்டு, சம்மாந்துறைப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்பனை விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

(தில்சாத் பர்வீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *