உள்நாடு

இல்மா அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் முன்னேற்றத்தைப் பார்வையிட விசேட அதிதி விஜயம்

முல்லைத்தீவு இல்மா அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் தொடர்ச்சியான முன்னேற்றம், கல்வி மற்றும் அறநெறிசார் செயற்பாடுகளில் அடைந்துள்ள வெற்றிகள், அத்துடன் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அறநெறி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் செயலமர்வுகளை நேரில் பார்வையிட்டு, அவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் விசேட விஜயமொன்று இடம்பெற்றது.

இதன்போது, அஹதிய்யா தேசிய உபதலைவரும், முஸ்லிம் விவாகப் பதிவாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான தேசகீர்த்தி அல்ஹாஜ் ஏ.எல்.எம். அஸ்வர் (JP) இல்மா அஹதிய்யா அறநெறிப் பாடசாலைக்கு விஜயம் செய்து, பாடசாலையின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்களைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் இல்மா அஹதிய்யா பாடசாலை நிர்வாகத்தினர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், முஅல்லிமாக்கள், மாணவர்கள், கலாசார உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற அதிபர், சட்டத்தரணி, சமூக சேவைப் பொறுப்பதிகாரி, பள்ளிவாசல் நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு விசேட அதிதியை வரவேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட அஹதிய்யா அறநெறிப் பாடசாலைகள் நிர்வாகத் தலைவர் M.I. பவுசுல் அமீர் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அறநெறிக் கல்வியின் வளர்ச்சியையும், மாணவர்களின் ஆளுமை மற்றும் ஒழுக்க விழுமிய மேம்பாட்டையும் இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இல்மா அஹதிய்யா அறநெறிப் பாடசாலையின் பயணம் மேலும் பல வெற்றிகளைப் பெற இவ்வாறான ஊக்குவிப்பு விஜயங்கள் உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *