உள்நாடு

“ரைஸ் ஒப் த லிட்டில் ஹமீடியன்ஸ்” சிறார்களின் திறமைத் திருவிழா – 2026

கொழும்பு – ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட “ரைஸ் ஒப் த லிட்டில் ஹமீடியன்ஸ் – சிறார்களின் திறமைத் திருவிழா – 2026” நிகழ்வு, அண்மையில் மருதானை டவர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் முகாமைத்துவக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கல்லூரியின் ஆரம்பப் பிரிவு சிறார்களின் வியக்கத்தக்க திறமைகள், படைப்பாற்றல்கள் மற்றும் தன்னம்பிக்கை என்பன மேடையேற்றப்பட்டன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக, கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.ஏ.கே.யூ.ஐ. ஹெட்டியாராச்சி மற்றும் கௌரவ விருந்தினராக பிரிவுக் கல்விப் பணிப்பாளர் திஸ்னா திஸாநாயக்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர் திருமதி என். ஷானியா டியான் (எஸ்.எல்.பி.எஸ்.) வழிகாட்டலில், பிரதி அதிபரும் ஆரம்பப் பிரிவு பொறுப்பாசிரியருமான திருமதி முஸ்னியா நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பப் பிரிவு சிறார்களின் கலை, இசை, நடனம், நாடகம், பேச்சு என பல்வேறு திறமைகளைக் கொண்ட வியக்கத்தக்க நிகழ்வுகள், வந்திருந்தோரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்றன.

அதீதிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு இச்சிறப்பு நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *