உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றகொழும்பு, அல் ஹிதாயா மாணவர்கள் கௌரவிப்பு
கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற
கொழும்பு, அல் ஹிதாயா கல்லூரி மாணவர்களையும், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் திருமதி ஸரூனா ஹாமித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான எம்.சி. பஹார்டீன் ஹாஜியார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வர்த்தகப் பிரிவில் சிங்கள மொழிமூல
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று ஏ சித்திகளைப் பெற்ற மாணவர் ஹிஜாஸ் முஹம்மட், உட்பட அதிபர்,ஆசிரியர், ஆசிரியைகளின் சேவைகளையும் பாராட்டி பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கல்வி முன்னேற்றத்திற்கும், ஏனைய செயற்பாடுகளுக்கும் தொடர்ச்சியாகப் பங்களிப்புச் செய்து வருவதையிட்டு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.







(றிபாஸ்.)
