அமெரிக்க அரசியலில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் டாக்டர் அப்துல் எல்-சயீத் யார்?
இவர் மிச்சிகன் மாகாணத்தின் அமெரிக்க செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்க செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் முஸ்லிம் உறுப்பினர் என்ற மாபெரும் வரலாற்றைப் படைப்பார்.
எகிப்தியப் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறந்த இவர், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ‘ரோட்ஸ் ஸ்காலர்’ (Rhodes Scholar) விருது பெற்று பொது சுகாதாரத்தில் முனைவர் பட்டமும் (DPhil), கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டமும் (MD) பெற்ற மருத்துவர் மற்றும் பேராசிரியர்.
டெட்ராய்ட் (Detroit) நகர சுகாதாரத் துறையின் தலைவராக மிக இளம் வயதிலேயே பொறுப்பேற்று, திவாலான நிலையில் இருந்த சுகாதாரத் துறையைச் சீரமைத்தவர்.
ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கண் கண்ணாடிகள் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
🌏அனைவருக்கும் இலவச மருத்துவம்,
🌎உழைக்கும் மக்களின் வரிச்சுமை குறைத்தல்,
🌎தொழிலாளர் நலன் மற்றும் AI கட்டுப்பாடு,
🌎அரசியலில் பண பல ஒழிப்பு,
🌏மனிதநேய அடிப்படையிலான குடியேற்றக் கொள்கை,
🌏இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிபந்தனையற்ற ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளார்.
”மக்களை நோயாளிகளாக்குவது வெறும் கிருமிகள் மட்டுமல்ல, மோசமான அரசியலும்தான்; அதை மாற்றவே அரசியலுக்கு வந்தேன்!” என்று முழங்கும் இவரது பிரச்சாரம் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
பொதுத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மைக் ரோஜர்ஸ், முன்னாள் எம்.பி மற்றும் முன்னாள் FBI அதிகாரி ஆவார்.
எல் சயீதை எதிர்த்துப் போட்டியிடும் மைக் ரோஜர்ஸுக்கும் பலமான ஆதரவு உள்ளது.
எல் சயீத், காசா மீதான தாக்குதலைக் கடுமையாக விமர்சிப்பதால், அமெரிக்காவின் சக்திவாய்ந்த இஸ்ரேல் ஆதரவு அமைப்பான AIPAC மற்றும் சில பெருநிறுவன நன்கொடையாளர்கள் இவருக்கு எதிராகக் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், இளைஞர்கள், தொழிலாளர்களின் பெருவாரியான ஆதரவுடனும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பிரச்சார பலத்துடனும் இத் தேர்தலை அப்துல் எல்-சயீத் எதிர்கொண்டு வருகிறார்
