புத்தளத்தில் இயங்கி வருகின்றன சுமார் 200 இற்கும் மேற்பட்ட குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான பயிற்சி வழிகாட்டல் நிகழ்ச்சி
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், புத்தளம் மாவட்ட இயங்கிவரும் குர்ஆன் மத்ரஸா ஆசிரியர், ஆசிரியைகளுக்கான பயிற்சி வழிகாட்டல் நிகழ்ச்சி நவம்பர் (05)ஆம் திகதி இவ் வழிகாட்டல் நிகழ்ச்சி புத்தளம் மாவட்ட செயலக வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட உதவிச் செயலாளர் சதுரங்க ஜயசிங்க கலந்து கொண்டதுடன்,
200 இற்கும் மேற்பட்ட குர்ஆன் மத்ரஸா ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
வளவாளர்களான M.N.N.M. ரமீஸ் மற்றும் சஹீர் சுபைர் ஆகியோர் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், உளவியல் அணுகுமுறை, மாணவர்களுடனான தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.
குர்ஆன் மத்ரஸாக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.







(ஏ.என்.எம் முஸ்பிக்)
