உள்நாடு

இன்றும் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார் நாமல்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
குறித்த விசாரணை தொடர்பில் கடந்த 03ஆம் திகதி நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கான எயார்பஸ் வானூர்திகளைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரைத் தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைத்து எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 28ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பிணை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் காரணமாக அவர் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *