உள்நாடு

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது; தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம்

2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக (ஒக்டோபர் – டிசம்பர்) மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இன்று (நவம்பர் 05) நடைபெற்ற பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீர்மட்டம் மற்றும் எல் நினோ (El Niño) வானிலை நிலைமைகளின் கீழ் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவிலான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமை ஆகிய காரணிகள் இந்தத் தீர்மானத்திற்குக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், குறித்த காலாண்டில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *