உள்நாடு

கிரிஷ் வழக்கு ; நாமல் நீதிமன்றின் ஆஜர்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதற்கமைய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

பிணை கோரிக்கை தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *