உள்நாடு

இன்று பரவலாக மழை பெய்யலாம்

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்ளை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த முரசு புயல் தீவிர புயலாக வலுபெற்று தற்போது ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கரையை கடந்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *