கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எச். மும்தாஸ் பேகம் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது
நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுப் கலந்து கொண்டிருந்தார். கௌரவ அததிகளாக மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஐ.ரி.ரி.சி. இட்டமல்கொட, பதில் கல்விப்பணிப்பாளர் எச்.ஏ.கே.யு.ஐ. செட்டியாராச்சி ஆகியோரும் விசேட அதிதிகளாக கல்வித் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர்களான ரஞ்ஜித் பிரேமதிலக, திருமதி இ.எம்.சாமலி எதிரிசிங்க திருமதி ஏ.எச்.என்.டி.எஸ்.விஜயவிக்ரம, கொழும்பு மத்தி கல்விப்பணிப்பாளர் டி.பி. திஸாநாயக்க ஆகியோரும் விசேட கல்வியலாளர்களான கொழும்பு பல்கலைக்கழக புவியியல் திணைக்களத் தலைவர் பேராசியர் பரீனா ரூசைக், இலங்கை திறந்த பல்கலைக்கழக பேராசியர் ஜே.டி.கரீம்டீன், ஆகியோரும் விசேட அழைப்பாளர்களாக றிஸ்வி ஸஹீட் , முப்தி ஹுஸைன், அமீன் பைலா, திருமதி பாத்திமா சாராஹ் சாலி, எம்.பி.எம். பைஸர், மொஹமட் இம்தியாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், கல்வியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது 2025 புலமைப்பரிசில் சாதனையாளர்கள்: 9 மாணவிகளுக்கும் 2021 – 2025 சாதாரண தர சாதனையாளர்கள்: 140 மாணவிகளுக்கும் 2021 – 2025 உயர்தர சாதனையாளர்கள்: 103 மாணவிகளுக்கும் பாடசாலையில் கல்விச் செயற்பாடுகளில் திறமைகளைக் காட்டி சாதனை படைத்த மேற்படி மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் , சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த கல்விசார் செயல்திறனுக்காக ஆசிரியர்களுக்கும் வருகைப்பதிவுக்காக 02 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட அதிகளுக்கும் பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாடசாலை அதிபரின் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரதம அதிதியின் உரையும் இடம்பெற்றன.
நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கஸீதா, இஸ்லாமிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன இறுதியாக பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்வுகள் நிறைவேறின.







(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
