பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை ரிச்டர் 3.6 மற்றும் 4.2 அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
77 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.849 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 68.767 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று காலை 6.06 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
இதனையடுத்து, பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக காலை 11.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
