உலகம்

திமுக தலைவரை சந்தித்த தமிமுன் அன்சாரி மற்றும் ம.ஜ.க நிர்வாகிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி மற்றும் ம.ஜ.க நிர்வாகிகளுடன் சந்தித்து உரையாடினார்.

அரை மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக எல்லோரும் இணைந்து ஆற்ற வேண்டிய சமூகப் பணிகள் குறித்தும் உரையாடியதாகவும் செய்தியாளரிடம் கூறினார் .

மேலும் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு;

மஜக தகவல் தொழில்நுட்ப அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *