பேருவளை அப்ரார் கல்வி அறக்கட்டளையின் புலமைப்பரிசில் வழங்கும் விழா ஒக்டோபர் 25இல்
பேருவளை அப்ரார் கல்வி அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வியில் திறமை காட்டியுள்ள பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் 2026 ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பேருவளை, மருதானை மனாரா பீச் வரவேற்பு மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அப்ரார் கல்வி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்வர் அஸாஹிம் (அஷ்ரபி-அல் அஸ்ஹரி) தலைமையிலும் மற்றும் அறக்கட்டளையின் ஏனைய அங்கத்தவர்களின் பங்குபற்றலுடனும் இடம்பெறவுள்ள இவ்விராவின் பிரதம அதிதியாக பைத்துல்மால் நிதியத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.ஏ.எம். இலியாஸ் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
இம்முறை பேருவளைப் பிரதேசத்தின் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த 68 மாணவர்களுக்கு இங்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை நல்குவதும், அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குப் பங்களிப்புச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இப்புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.




(பேருவலை பீ.எம்.முக்தார்)
