உள்நாடு

தொடர்பூடக ஒழுங்குகள் தொடர்பில் தேசிய சூரா சபையின் வழிகாட்டல்கள்

தேசிய ஷூரா சபை தொடர்பூடகப் பாவனை சம்பந்தமாக பின்வரும் வழிகாட்டல்களை முன்வைக்கிறது:-

சமீபகாலங்களில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் – குறிப்பாக Facebook, TikTok, WhatsApp குழுமங்களில் – அவதூறான பதிவுகள், பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட வீடியோக்கள் அதிகரித்து வருவதை நாம் அறிவோம்.

உணர்வுகளைத் தூண்டும் வகையிலான இப்பதிவுகளைக் காணும் போது நாம் அனைவரும் உணர்ச்சிவசப்படாமல், விழிப்புணர்வுடனும் தூரநோக்கோடும் ஞானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வழிகாட்டல்கள்:

  1. செய்தியை உறுதிப்படுத்திக் கொள்வது.

அல்லாஹ் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا
“ஈமான் கொண்டவர்களே! ஒரு பாவி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அறியாமையால் நீங்கள் மக்களுக்கு தீங்கு செய்து விடாதிருக்க அதை தீர விசாரித்துக் கொள்ளுங்கள்.” [அல்-ஹுஜுராத்: 6]

உறுதிப்படுத்தாமல் எதையும் பிறருக்குப் பகிரலாகாது. வெறுப்புப் பதிவை கண்டால் அதை பரப்பிவிடக் கூடாது. ஸ்கிரீன் ஸொட் எடுத்து அதனை ஆதாரமாக வைத்துக் கொள்ளலாம்.

  1. பதிலுக்கு ஏசாக் கூடாது.

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ
“அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள்” [அல்-அன்ஆம்: 108]

அவர்கள் நம்மை ஏசினாலும், நாம் அவர்களின் மதத்தையோ ஏனைய கலாசார தனித்துவங்களோயோ பதிலுக்கு ஏசக்கூடாது. இதுவே நபி (ஸல்) அவர்களின் பண்பாகவும் இருந்தது.

  1. பொறுமை மற்றும் ஹிக்மத்
    வெறுப்புப் பதிவுகளை காணும் போது மிகவுமே பண்பாடாக நடந்துகொள்ள வேண்டும்
    ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ
    “நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக” [புஸ்ஸிலத்: 34]

தாயிப் நகரில் கல்லால் அடித்தவர்களுக்கு நபி(ஸல்) துஆ செய்தார்கள்; சாபமிடவில்லை.

  1. முறையான வழியில் எதிர்கொள்வது.

ஆபாசமாக பதில் பதிவுகளைச் செய்யலாகாது. மாறாக அவற்றை முஸ்லிம் சமூகத்தின் உரிய நிறுவனங்களுக்கோ
நம்பிக்கையான சட்டத்தரணிகளுக்கோ அனுப்பிவைக்கலாம்.

பதிவொன்று வன்முறையைத் தூண்டும் விதத்திலோ இன் உணர்வைச் சீண்டும் வகையிலோ அமைந்திருந்தால் Cyber Crime பிரிவில் முறைப்பாடு செய்யலாம்.

நாம் செய்ய வேண்டியவை:

  1. பதிவிடும் முன் நமது சிந்தனையையும் விரல்களையும் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியமாகும். உணர்ச்சிவசமான ஒரு Comment பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தி முழு சமூகத்தையும் பாதிக்கலாம்.
  2. தற்காலத்தில் பிழையான சமூக ஊடகப் பாவனை தான் பெரும் குழப்பங்களது மூலம் என குறிப்பாக எமது பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுங்க வேண்டும்.
  3. பிற சமயத்தினருடன் குறிப்பாக அயலவர்களுடன் நல்லுறவை பலப்படுத்துவதும் நற்பண்புகளால் இஸ்லாத்தைப் பிரதிநித்துவப்படுத்துவதும் அவசியமாகும்.
  4. அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆக்களில் ஈடுபட வேண்டும். நாட்டின் அமைதிக்காகவும், நமது மார்கம் மற்றும் சமூகத்தினதும் பாதுகாப்பிற்காகவும் துஆ செய்வது அல்லாஹ் பாதுகாப்பையும் அருளையும் பெற்றுத்தரும்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
“நிச்சயமாக நாமே இந்த திக்ரை (குர்ஆனை) இறக்கினோம், நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்போம்.” [அல்-ஹிஜ்ர்: 9]

இஸ்லாத்தை எவராலும் அழித்துவிட முடியாது. ஆனால் இந்த சோதனையின் போது நாம் எப்படி நடந்து கொண்டோம் என்று அல்லாஹ் நம்மை விசாரிப்பான்.

அல்லாஹ் இலங்கையை அனைத்து பித்னாக்களிலிருந்தும் பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்,

தேசிய ஷூரா சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *