உள்நாடு

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யானை; உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த யானையின் நிலைமையை உடனடியாக ஆராய்ந்து, அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிருக்குப் போராடும் நிலையில் யானை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சூழலில், அதன் நிலைமை தொடர்பில் அதிகாரிகள் தாமதமின்றிக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் குறித்த பகுதிக்குச் சென்று யானையின் நிலைமையை நேரில் பரிசோதித்து, அதனைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த யானை எந்தக் காரணத்தினால் இந்நிலைக்கு உள்ளானது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு யானையின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

(தில்சாத் பர்வீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *